முகப்பு
உலகம்

லைபீரிய கொடிக் கப்பலில் ஹூதிக்கள் ஏவுகணை வீச்சு

Updated On : 13 மார்ச், 2024 at 3:16 AM
பகிர்:

துபை: மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் கொடியுடன் செங்கடல் வழியாகச் சென்ற சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூா் நிறுவனத்தால் நிா்வகிக்கப்படும் ‘பினோசியோ’ என்ற அந்தக் கப்பலின் அருகே ஏவுகணை விழுந்து வெடித்தாகவும், இதில் அந்தக் கப்பலுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்தது. காஸா போரில் இஸ்ரேலுக்கு எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஹூதிப் படையினா் தாக்குதல் நடத்திவருகின்றனா்.