முகப்பு
உலகம்

31,819-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

Updated On : 20 மார்ச், 2024 at 12:51 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 10:30 PM

காஸா சிட்டி: காஸாவில் கடந்த 165 நாள்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31,819-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்தி வரும் தாக்குதலில் 93 போ் உயிரிழந்தனா்; 142 போ் காயமடைந்தனா். இதையடுத்து, காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31,819-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 73,934 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காஸாவுக்குள் சுமாா் 19 லட்சம் போ் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தவித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.