பெஞ்சமின் நெதன்யாகு
பெஞ்சமின் நெதன்யாகு 
உலகம்

மீண்டும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை!

இணையதள செய்திப்பிரிவு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸாவில் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க அறிவுறுத்தியுள்ளதாக வெள்ளிக்கிழமை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானுக்கு முன்பாக தற்காலிக போர் நிறுத்தத்தை எட்ட மத்தியஸ்தம் மேற்கொள்ளும் நாடுகள் முயற்சித்தபோதும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் உடன்படவில்லை.

ஐக்கிய நாடுகள் அவையில் திங்கள்கிழமை உடனடியான போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பும் உடன்படிக்கை நிறைவேறாததற்கு பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தன.

இந்த நிலையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பரஸ்பர கைதிகள் விடுதலை தொடர்பாக உடன்படிக்கை எட்ட மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என கத்தார் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இது குறித்து, இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட்டின் தலைவர் டேவிட் பர்னேயா உடன் நெதன்யாகு பேசியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

SCROLL FOR NEXT