இஸ்ரேலின் அறிவிப்பையடுத்து ராபாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள் ஏபி
உலகம்

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

இஸ்ரேல் ராணுவம் ராபாவில் நடவடிக்கைக்கு எச்சரிக்கை!

DIN

ராபாவில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்களை அங்கிருந்து இடம்பெயர அறிவுறுத்தியுள்ளது இஸ்ரேல் ராணுவம். ராபாவுக்குள் தரைவழி ராணுவ நடவடிக்கையை தொடங்கவிருப்பதற்கான அறிகுறியாக இந்த அறிவிப்பு கருதப்படுகிறது.

அக்.7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போர் ஏழாவது மாதமாகத் தொடர்ந்துவரும் நிலையில் திங்கள்கிழமை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, இரு தரப்புக்குமிடையே நடைபெற்று வரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை பாதிக்கும் என கத்தார் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் அறிவிப்பையடுத்து ராபாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்

23 லட்சத்துக்கும் அதிகமான காஸா மக்கள் இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளால் காஸாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து தெற்குக் காஸாவில் உள்ள ராபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

7 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் ஹமாஸின் புகலிடமாக ராபா மாறியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றனர். ஆகவே தரைவழி ராணுவ முன்னேற்றம் தவிர்க்க முடியாதது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலின் அறிவிப்பையடுத்து ராபாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்

இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் நடவ் ஷோஷானி, ‘ஏறத்தாழ 1 லட்சம் பேரை, இஸ்ரேல் அறிவித்த அருகிலுள்ள மனிதநேய மண்டலமான முவாஸி பகுதிக்கு இடம்பெயர அறிவுறுத்தியுள்ளோம். இஸ்ரேல் சில வரையறைக்கப்பட்ட நோக்கத்துக்கான நடவடிக்கைக்குத் திட்டமிட்டு வருகிறது’ என அவர் குறிப்பிட்டார்.

நகரத்துக்குள் எப்போது ராணுவ ஊடுருவல் தொடங்கும் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

கடந்த அக்டோபர் முதல் இஸ்ரேல் தரைவழி நடவடிக்கை தொடங்கவிருப்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனவே இந்த இடம்பெயரக் கோரும் அறிவிப்பும் ராபாவுக்குள் ராணுவத்தின் ஊடுருவலுக்கான அறிகுறி எனக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT