விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்  
உலகம்

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார்.

DIN

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை விண்வெளிக்குச் செல்லவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

விண்வெளி நிலையத்தில் 322 நாள்கள் தங்கியிருக்கும் திட்டத்தில் சுனிதா வில்லியம்ஸ் நேற்று செல்லவிருந்தார்.

அந்த நாட்டின் போயிங் நிறுவனம் ‘ஸ்டாா்லைனா்’ என்ற விண்வெளி ஓடத்தை உருவாக்கி வருகிறது. அந்த ஓடம் சோதனை முறையில் முதல்முறையாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தப்படவிருந்தது.

ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்படவிருந்த ஸ்டாா்லைனரில் சுனிதா வில்லியம்ஸுடன் பட்ச் வில்மோரும் செல்லவிருந்தார்.

ஆனால், ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்தது.

இந்த நிலையில், புதிதாக ஆக்சிஜன் குழாய் மாற்றப்பட்டு வருகின்ற 17-ஆம் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொள்வார் என்று நாசா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT