ராஃபாவிலிருந்து வெளியேறும் மக்கள் AFP
உலகம்

ராஃபாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனர்கள்: ஐநா கவலை!

ராஃபாவிலிருந்து இடம்பெயர்ந்த 80 ஆயிரம் பேர்!

DIN

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமை, வியாழக்கிழமை 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ராஃபாவில் இருந்து கடந்த 3 நாள்களில் இடம்பெயர்ந்ததாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் காஸாவின் தெற்குப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை விரிவிப்படுத்தியுள்ளதால் அங்குள்ள மக்களை இடம்பெயரச் சொல்லி அறிவுறுத்தியது.

ராஃபாவிலிருந்து வெளியேறும் மக்கள்

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைய தொடங்கிய மே 6-ம் தேதி முதல் 80 ஆயிரம் பேர் ராஃபாவில் இருந்து, வேறு புகலிடம் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.

ராஃபாவிலிருந்து வெளியேறும் மக்கள்

இடம்பெயரும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பாதுகாப்பான இடம் என்று எதுவுமில்லை எனவும் முகமை கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன நாயகன் ஓடிடியில் வெளியீடு? அமேசான் ப்ரைம் எச்சரிக்கை!

டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

பிரதமர் வருகை! சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட சென்னையின் முக்கிய பகுதிகள்!

காங்கிரஸில் விருப்ப மனு அளிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

கேரள பேரவையிலும் விவாதப்பொருளான ஆளுநர் உரை! - என்ன நடந்தது?

SCROLL FOR NEXT