படம்: எக்ஸ்/ருத்ரா 
உலகம்

நடுவானில் விமானம் அதிர்வு: ஒருவர் பலி, 30 பேர் காயம்?

இந்த விமானத்தில் 211 பயணிகள், 18 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர்.

DIN

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக ஒரு பயணி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-312 ரக விமானம் இன்று லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த விமானத்தில் 211 பயணிகள், 18 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், திடீரென நடுவானில் ஏற்பட்ட கடும் அதிர்வின் காரணமாக பாங்காங் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க விமான கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு விமானி அனுமதி கோரியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாங்காங் விமான நிலையத்தில் அவசரமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இன்று 3.34 மணியளவில் தரையிறக்கப்பட்டது.

நடுவானில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக பயணி ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்த பயணிகள் அனைவருக்கும் பாங்காங் விமான நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT