பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோர்.  
உலகம்

பப்புவா நியூ கினியா: நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலியாகினர்.

DIN

பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் பசிபிக் தீவு நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் (370 மைல்) தொலைவில் உள்ள எங்கா மாகாணத்தின் காகலம் கிராமத்தில் அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 100-க்கு மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூடும் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

நிலச்சரிவில் புதையுண்ட உடல்களை உள்ளூர்வாசிகள் மீட்டெடுக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT