ரஷிய ஏவுகணையால் தாக்கப்பட்ட கார்கிவ் குடியிருப்புக் கட்டடம் ஏபி
உலகம்

உக்ரைன் கார்கிவில் ரஷிய தாக்குதல்: 5 பேர் பலி!

கார்கிவில் ரஷிய ஏவுகணை தாக்குதல்: 5 பேர் பலி, 24 பேர் காயம்

DIN

வடகிழக்கு உக்ரைனிய நகரமான கார்கிவில் ரஷிய ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும் 24 பேர் காயமுற்றதாகவும் அந்த பகுதியின் கவர்னர் ஓலே சினிஹுபோவ் வெள்ளிக்கிழமை டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பெரும்பாலானோர் 5 அடுக்கு கட்டடத்தில் வசித்து வந்ததாகவும் இந்த தாக்குதலால் தீயணைப்பு இயந்திரம் மற்றும் அவசர ஊர்தி ஆகியவை சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷிய ராணுவம் 5 கணைகளை ஏவியதில் குறைந்தது 20-க்கும் அதிகமான குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவில் தாழ்வான இலக்கை தாக்கி அழிக்கும் க்ரூஸ் ஏவுகணை தாக்கியதாகவும் கார் பழுது நிலையத்தில் நின்றிருந்த 6 கார்கள் ஏவுகணையின் உதிரி பாகங்கள் வெடித்ததில் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்பகிர்மான நிலையம் சேதமடைந்துள்ளது. பின்னர் மின்சார இணைப்பு சீர்ப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் இரண்டு ஆண்டுகளாக எதிர்கொண்டுவரும் நிலையில் உக்ரைனின் மின்பகிர்மான நிலையங்கள் தொடர்தாக்குதலுக்கு உள்ளாவதால் அடிக்கடி மின்வெட்டுகள் ஏற்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களே உஷார்!! வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழால் ரூ. 97,000 மோசடி!

ஹிஜாப் அணிந்து மசூதிக்குச் சென்ற தீபிகா படுகோன்..! கடுமையான விமர்சனம்!

கோவை மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர்! தமிழகத்தின் நீளமான பாலம்!

தீபாவளி வெளியீட்டில் இளம் நாயகர்கள்!

தமிழக மீனவர்கள் 30 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை!

SCROLL FOR NEXT