உக்ரைன் ராணுவம் ஏபி
உலகம்

உக்ரைனுக்கு ஜெர்மன் அளித்த புதிய அனுமதி என்ன?

ரஷிய இலக்குகளை தாக்க ஜெர்மானிய ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்த அனுமதி

DIN

ஜெர்மன் அளித்துள்ள ஆயுதங்களை ரஷிய பிராந்தியத்தில் உக்ரைன் பயன்படுத்தலாம என ஜெர்மன் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை ஜெர்மன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் ஹேபஸ்ட்ரீட் வெள்ளிக்கிழமை பெர்லினில் வெளியிட்டார்.

சமீப வாரங்களில் உக்ரைன் தனது ஆதரவு நாடுகளிடம் அவர்கள் வழங்கிய ஆயுதங்களை ரஷிய பிராந்தியத்தில் ரஷிய படையை எதிர்கொள்ள பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்டு வந்தது.

இதேபோல அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் உக்ரைன், ரஷிய பிராந்தியத்தில் தங்கள் சார்பாக அளிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்த விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டன.

பல மேற்குலக நாடுகள் தாங்கள் அளிக்கும் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்களை உக்ரைன் பிராந்தியத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்திருந்தன.

ரஷியாவுடனான மோதல் விரிவடைவதை தடுக்கவும் நேரடியாக உக்ரைன் நட்பு நாடுகள் போரில் ஈடுபடுவதை தவிர்க்கவும் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த கட்டுப்பாடுகளை ரஷியா தனக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொண்டு எல்லைக்கு அருகில் படையெடுத்து வந்து தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT