பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 900 பேர் கடந்த இரு நாள்களில் அவர்களின் சொந்த நாட்டுக்கு திரும்பியதாக அந்த நாட்டின் அகதிகள் மற்றும் மறுகுடியுரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தோர்ஹாம் மற்றும் ஸ்பின் போல்டாக் எல்லை பகுதிகள் மூலமாக ஆப்கனுக்குள் அவர்கள் நுழைந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் மக்களுக்கு எல்லை சோதனை சாவடியிலேயே அவர்களுக்கு வேண்டிய தற்காலிக தங்குமிடம் உள்ளிட அடிப்படை வசதிகளை அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆப்கன் பொறுப்பு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் போரினால் சிதைவுற்ற நாட்டை மீண்டும் கட்டமைக்க ஆப்கனிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை நாடு திரும்ப அழைப்பு விடுத்துள்ளது ஆப்கன் பொறுப்பு அரசு.
பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து மார்ச் 21,2023 முதல் மார்ச் 19,2024 கால இடைவெளியில் 15 லட்சத்துக்கும் அதிகமான ஆப்கன் அகதிகள் நாடு திரும்பியதாக அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.