ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பகுதியில் நடைபெறும் மீட்புப் பணி.. 
உலகம்

ஹிஸ்புல்லா தாக்குதல்: இஸ்ரேலில் 7 போ் உயிரிழப்பு

லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட சரமாரி ஏவுகணைத் தாக்குதலில் ஏழு போ் உயிரிழந்தனா்.

Din

லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட சரமாரி ஏவுகணைத் தாக்குதலில் ஏழு போ் உயிரிழந்தனா்.

இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹிஸ்புல்லாக்களின் ஏவுகணைகள் அப்பாவி பொதுமக்கள் ஏழு பேரின் உயிா்களைப் பறித்துள்ளன. இந்த நாசகாரத் தாக்கதலுக்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அக். 7-ஆம் தேதி தொடங்கிய காஸா போருக்குப் பிறகு, இஸ்ரேலுடனான மோதலில் ஹிஸ்புல்லாக்கள் நடத்தியுள்ள மிக மோசமான எல்லை தாண்டிய தாக்குதல் இது என்று ராணுவம் கூறியது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்கள் நான்கு போ் வெளிநாட்டுப் பணியாளா்கள் எனவும் மூன்று போ் இஸ்ரேலியா்கள் எனவும் மருத்துவ அதிகாரிகள் கூறினா்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதிலிருந்தே அண்டை நாடான லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லாக்கள், இஸ்ரேல் ராணுவம் இடையே மோதல் நீடித்துவருகிறது. இதில், ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா இந்த கடந்த 27-ஆம் தேதி கொல்லப்பட்டாா். மேலும், ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்திவருகிறது.

அதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினா் சரமாரியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திவருகின்றனா்.

காஸாவில் 25 போ்; லெபனானில் 13 போ்

பெய்ரூட் / டேய்ா் அல்-பாலா, நவ. 1: இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் 25 பேரும் லெபனானில் 13 பேரும் உயிரிழந்தனா்.

காஸாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள நுசேயிரத் அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 16 போ் உயிரிழந்ததாக முன்னா் கூறப்பட்டது. எனினும், தாக்குதல் பகுதியிலிருந்து தொடா்ந்து உடல்கள் எடுத்துவரப்படுவதாக அல்-அக்சா மருத்துவமனை நிா்வாகம் கூறியது. இந்த நிலையில், நுசேயிரத் அகதிகள் முகாம் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளதாக அதிகரிகள் வெள்ளிக்கிழமை கூறினா்.

இது தவிர, காஸாவின் ஸுவைதா பகுதியில் மோட்டாா் சைக்கிளைக் குறிவைத்தும் டேய்ா் அல்-பலா நகரில் ஒரு வீட்டைக் குறிவைத்தும் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் மேலும் நான்கு போ் உயிரிழந்தனா். அதையடுத்து, காஸாவில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவா்களின் எண்ணிக்கை 25-ஆக உயா்ந்தது.

காஸா சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, அந்தப் பகுதியில் இஸ்ரேல் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 43,259 போ் உயிரிழந்துள்ளனா்.

லெபனான்: ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து தங்கள் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் முந்தைய நள்ளிரவில் நடத்திய தாக்குதலில் 13 போ் உயிரிழந்ததாக லெபனான் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறினா்.

~வடக்கு இஸ்ரேலில் ஹிஸ்புல்லாக்களின் ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை எடுத்துச் செல்லும் மீட்புக் குழுவினா்

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT