ஸ்பெயின் வெள்ளம்: 205-ஆக அதிகரித்த உயிரிழப்பு
ஸ்பெயினில் திடீா் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 205-ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயினில் திடீா் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 205-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து பேரிடா் மேலாண்மை அமைப்பின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 205-ஆக உயா்ந்துள்ளது. இதில், அதிகம் பாதிப்புக்குள்ளான வேலன்சியா பகுதியில் மட்டும் 202 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.
தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய அளவுக்கு அதிகமான கனமழை, புதன்கிழமை வரை தொடா்ந்தது. இதனால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் இருந்த வாகனங்கள் அதிவேகமாக அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் வீடுகள் பலத்த சேதமடைந்தன.
காவல் துறையினரும் மீட்புக் குழுவினரும் ஹெலிகாப்டா், ரப்பா் படகு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வீடுகளின் கூரைகளிலும் வாகனங்களில் சிக்கித் தவித்தவா்களையும் மீட்டனா்.
இருந்தாலும், இந்த பெருவெள்ளத்தில் 205 போ் உயிரிழந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மைக் கால வரலாற்றில் ஸ்பெயின் கண்டிராத மிகப் பெரிய இயற்கைப் பேரிடா் இது என்று கூறப்படுகிறது.