டொனால்ட் டிரம்ப்  Alex Brandon
உலகம்

அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன்: டிரம்ப் உரை

குடியரசுக் கட்சி வெற்றிக்காக வாக்களித்தவர்களுக்கு எனது நன்றி என டிரம்ப் உரையாற்றினார்.

DIN

முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. குடியரசுக் கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் எனது நன்றி என்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உரையாற்றி வரும் டொனால்ட் டிரம்ப் தனது உரையின்போது, மக்கள் என்னை நம்பித்தான் வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது என்று கூறியிருக்கிறார்.

டொனால்ட் டிரம்ப்

வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக, தனது மனைவிக்கு உணர்ச்சிப்பொங்க நன்றி தெரிவித்துக்கொண்டார் டிரம்ப். மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துக் கொண்டார்.

இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது. இதுவரை யாரும் காணாத ஆட்சியை அளிக்கப்போகிறேன். அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன், பிரச்னைகளைத் தீர்ப்பேன். எனது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது. அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன் என்றும் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மட்டுமல்ல, செனட் மற்றும் மக்கள் சபையிலும் நமக்கே முன்னிலை கிடைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி நள்ளிரவு முதல் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. தேர்தலில் வெற்றி பெற 270 இடங்களைப் பெற வேண்டும் என்ற நிலையில், அதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT