வாக்கு எண்ணிக்கை. AP
உலகம்

அமெரிக்க தேர்தல்: 17 மாகாணங்களில் டிரம்ப், 9-ல் கமலா வெற்றி!

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் காலை 8.30 நிலவரப்படி முன்னிலை பெற்றுள்ளார்.

DIN

அமெரிக்க அதிபர் தேர்தலில் காலை 8.30 மணி நிலவரப்படி(இந்திய நேரம்) குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி புதன்கிழமை காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

இதுவரையில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்ட மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்தான் முன்னிலை பெற்றுள்ளார்; ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவில் உள்ளார்.

மொத்தம் 50 மாகாணங்களில் 538 பிரதிரிகளை தேர்வு செய்வதற்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வெற்றி பெற 270 பிரதிநிதிகள் தேவை. காலை 8.30 நிலவரப்படி, டிரம்பின் குடியரசு கட்சியின் 188 வேட்பாளர்களும், ஜனநாயகக் கட்சியின் 99 வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளனர்.

இதுவரை வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதில், இண்டியானா, கென்டக்கி, மேற்கு வெர்ஜினியா, ஓக்லஹோமா, மிஸௌரி, டென்னிஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, தெற்கு கரோலினா, டெக்சாஸ், தெற்கு டகோடா, வடக்கு டகோடா உள்ளிட்ட 17 மாகாணங்களை டிரம்ப் கைப்பற்றியுள்ளார்.

வெர்மோன்ட், மேரிலாண்ட், மசாசுசெட்ஸ், கொலம்பியா, இல்லினொய்ஸ், நியூ ஜெர்ஸி, நியூ யார்க் உள்ளிட்ட 9 மாகாணங்களில் கமலா வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை டிரம்ப் 52.4 சதவிகிதமும், கமலா ஹாரிஸ் 46.4 சதவிகிதமும் பெற்றுள்ளனர்.

கலிஃபோர்னியா, வாஷிங்டன், அரிசோனா, ஓரிகான் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுதலை நாள்: காரைக்காலில் கலை நிகழ்ச்சி

தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாளை. அருகே விபத்து: பெண் காவல் ஆய்வாளா் காயம்

நெல்லையப்பா் கோயிலில் நாளை ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

மகளிர் உலகக் கோப்பை! முதல்முறை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!

SCROLL FOR NEXT