கோப்புப் படம் 
உலகம்

பழத்திற்குள் 13 டன் போதைப்பொருள்!

ஸ்பெயின் துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் கடத்தி வரப்பட்ட 13 டன் போதைப்பொருள் பறிமுதல்

DIN

ஸ்பெயின் துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் கடத்தி வரப்பட்ட 13 டன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஸ்பெயின் நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் நடத்தப்பட்ட சோதனையில் 204 டன் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் வருடாந்திர சராசரியைவிட அதிகமாகும்.

இந்த நிலையில், ஈக்வடாரின் குவாயாகிலில் இருந்து அல்ஜீசிராஸ் வந்திருந்த சரக்குக் கப்பலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வாழைப்பழங்களின் பின்னால் 13 டன் (13,000 கிலோ) போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், கப்பலில் ஏற்றுமதி செய்த நிறுவனத்தின் 2 மேலாளர்களையும் தேடி வருகின்றனர். அந்த நிறுவனத்தின்மீது ஏற்கெனவே சட்டவிரோத கடத்தல் புகார் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT