முஸ்லிம் பெண்கள் 
உலகம்

சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை: ஜனவரி 1 முதல் அமல்!

சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை விதிக்கப்பட்ட உத்தரவானது ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.

DIN

பல்வேறு மக்களின் எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில், முகத்தை மூடியபடி பொது வெளிகளில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறை வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மீறினால், ஆயிரம் சுவிஸ் பிராங்க்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளாகியிருக்கும் புர்காவுக்குத் தடை என்பது, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், சில விதிவிலக்களுடன் இது நடைமுறைப்படுத்தப்பட்டாலும், விதியை மீறினால் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக, ஃபெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது. அதே வேளையில், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது, வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும், மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம், ஆனால், மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத போது, முகத்தை மூடிக்கொள்ளவும் முன் அனுமதி பெற்று வரலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

SCROLL FOR NEXT