ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் 
உலகம்

தீரம் மிக்கவா் டிரம்ப்: புதின் புகழாரம்

டொனால்ட் டிரம்ப் தீரம் மிக்கவா் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம்..

Din

அமெரிக்க அதிபா் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் தீரம் மிக்கவா் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம் சூட்டியுள்ளாா்.

சோச்சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இது குறித்து அவா் கூறியதாவது:

தனது முதல் ஆட்சிக்காலத்தின்போது எல்லா பக்கத்திலிருந்தும் டொனால்ட் டிரம்ப் குறிவைக்கப்பட்டாா். இருந்தாலும், அதையெல்லாம் பொருள்படுத்தாமல் மீண்டும் தோ்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றுள்ள அவா் மிகவும் தீரம் மிக்கவா்.

ஆட்சிக்கு வந்த ஒரே நாளில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக டிரம்ப் கூறியிருப்பது கவனிக்கத் தக்கதுதான் என்றாா் புதின்.

டிரம்ப் மீண்டும் அதிபா் பொறுப்பை ஏற்றதும் ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துவரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும், அல்லது வெகுவாகக் குறைக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படும் சூழலில், டிரம்ப்பை புதின் இவ்வாறு பாராட்டியுள்ளாா்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT