FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காஸாவில் போர் நிறுத்தம்: டிரம்ப்பிடம் ஈரான் வலியுறுத்தல்!

காஸாவில் சண்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: டிரம்ப்பிடம் ஈரான் வலியுறுத்தல்

11 November 2024, 5:43 pm IST
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட உறவுகளைப் பார்த்து கதறி அழும் பெண்கள் - AP
பகிர்:

தெஹ்ரான்: காஸாவில் சண்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபராகும் டொனால்ட் டிரம்ப்பிடம் ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் 11 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்ப்பதற்றம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் செய்தியாளர்களுடன் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகே, “காஸாவில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் படுகொலையை அமெரிக்க அதிபராகும் டொனால்ட் டிரம்ப் நிறுத்த வேண்டும்” என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் - இஸ்ரேல் ஆகிய இரு தரப்பும் உடன்படிக்கை செய்துகொள்ள முன்வராத நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான மத்தியஸ்த நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்வதாக கத்தார் அண்மையில் அறிவித்தது.

இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் உருக்குலைந்து போயுள்ள காஸாவில், ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் காஸாவின் ஜபலியா நகரில் உள்ள அகதிகள் முகாமில் குண்டுவெடித்து சுமாா் 17 போ் உயிரிழந்தனா். அவா்களில் 9 போ் பெண்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments