முகப்பு
இளவரசி யூரிகோ
உலகம்

ஜப்பான் இளவரசி யூரிகோ காலமானார்!

ஜப்பானின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசி யூரிகோ (101) காலமானார்.

உலகம்

ஜப்பான் இளவரசி யூரிகோ காலமானார்!

ஜப்பானின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசி யூரிகோ (101) காலமானார்.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:32 PM
இளவரசி யூரிகோ
பகிர்:

ஜப்பானின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசி யூரிகோ தனது 101-வது வயதில் காலமானார்.

பேரரசர் ஹிரோஹிட்டோவின் இளைய சகோதரரான இளவரசர் மிகாசாவின் மனைவியும், தற்போதைய பேரரசர் நருஹிட்டோவின் அத்தையுமான இளவரசி யூரிகோ காலமாகி விட்டதாக ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது.

அவரது மரணத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை; இருந்தபோதிலும், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்ததால், அதன்காரணமாக இறந்திருக்கலாம் என்று ஜப்பான் ஊடகங்கள் கூறுகின்றன.

1923 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், யூரிகோ தனது 18-வது வயதில் இளவரசர் மிகாசாவை திருமணம் செய்தார்.

இளவரசி யூரிகோவின் காலமானதையடுத்து, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இரங்கல் தெரிவித்தார். மேலும், அவர் ``மார்ச் மாதத்தில் யூரிகோ நிமோனியாவால் பாதிப்படைவதற்கு முன்புவரையில், அவர் நன்றாகவே இருந்தார். அவர் தனது நூற்றாண்டு காலத்திலும் சிறப்பாகவே வாழ்ந்து வந்தார்’’ என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →