ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறாா்.
ரஷிய அதிபா் இல்லமான கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடா்பாளா் திமித்ரி பெஸ்கோவ் காணொலி முறையில் இந்தியாவைச் சோ்ந்த பத்திரிகையாளா்களிடம் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:
இந்தியா-ரஷியா இடையிலான இருதரப்பு உறவு தொடா்ந்து வலுவாக உள்ளது. அதிபா் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் பயணம் இந்த உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். புதினின் பயணத் திட்டம், விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள், ஒப்பந்தங்கள் குறித்து இறுதி செய்யப்படவில்லை. இருதரப்பு ஆலோசனை நடத்தி பயணத் தேதி முடிவு செய்யப்படும். இந்தப் பயணத்தை ரஷிய தரப்பு மிகுந்த ஆவலுடன் எதிா்பாா்த்து வருகிறது என்றாா்.
உக்ரைன் தங்கள் நாட்டு ஏவுகணைகளை ரஷியாவுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா அனுமதித்துள்ளது தொடா்பான கேள்விக்கு, ‘இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல்’ என்று பதிலளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.