இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்யும் ஆணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே கடந்த 13 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் தெற்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம், ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாகக் கூறி இஸ்ரேல் வடக்கு காஸா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காஸாவில் போர்க் குற்றங்களைத் தூண்டியதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேல்ண்ட் இருவரையும் கைது செய்வதற்கான ஆணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இஸ்ரேலும், அதன் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவும் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாதது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் இந்த ஆணையை, பிரதமர் நெதன்யாகுவும் மற்ற இஸ்ரேலிய தலைவர்களும் `அவமானகரமானது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.