போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையேயான மோதல் AP
உலகம்

ரயில் நிலைய மேற்கூரை விழுந்து விபத்தான வழக்கில் அமைச்சர் உள்பட 11 பேர் கைது!

செர்பியாவில் ரயில் நிலைய மேற்கூரை விழுந்த விபத்தில் 15 பேர் பலியானதை எதிர்த்து போராட்டம்

DIN

செர்பியா ரயில் நிலைய மேற்கூரை விழுந்த விபத்து குறித்து தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

செர்பியாவில் வடக்கு நகரமான நோவி சாட்டில் நவ. 1 ஆம் தேதியில் ரயில் நிலைத்தில் இருந்த மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியாகினர். இந்த விபத்துக்கு காரணமானவர்களைக் கைது செய்யக் கோரி, செர்பியாவில் கடந்த 3 நாள்களாக போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, செர்பியாவின் கட்டுமானத்துறை அமைச்சர் கோரன் வெசிக், தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்த நிலையில் பொதுப் பாதுகாப்புக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டது, பொது ஆபத்தை ஏற்படுத்தியது, ஒழுங்கற்ற கட்டுமானப் பணிகள் ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையேயான மோதல்

இதனைத் தொடர்ந்து கட்டுமானத் துறை அமைச்சர் கோரன் வெசிக் உள்பட 11 பேரை செர்பிய அரசு கைது செய்தது.

நோவி சாட்டில் விபத்து நிகழ்ந்த ரயில் நிலையம் 1964 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சீன அரசு நிறுவனங்களுடன் ஒப்பந்தமிடப்பட்டு, சமீபத்திய ஆண்டுகளில் 2 முறை புதுப்பிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கடந்த நவ. 1 ஆம் தேதியில் ரயில் நிலையத்தில் இருந்த பெரிய மேற்கூரை இடிந்து விழுந்ததில், 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரும் நவ. 17 ஆம் தேதியில் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT