லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களில் சேதமடைந்த வாகனம் AP
உலகம்

ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை: இஸ்ரேலை தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும்!

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு! ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

DIN

காஸாவில் ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

இதனிடையே, மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரிக்கும் வகையில், ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேலையொட்டிய லெபனான் எல்லைப் பகுதிகளில், சண்டை தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட் உடன், அமெரிக்க பாதுகாப்புத்துறைச் செயலர் லாய்டு ஜெ. ஆஸ்டின் இன்று(அக். 1) தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது, “இஸ்ரேலை பாதுகாப்பதற்கான உரிமை அந்நாட்டுக்கு இருக்கிறது. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கிறது.

ஏற்கெனவே இஸ்ரேலில் கடந்தாண்டு அக்டோபர் 7-இல் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களைப் போன்று, இஸ்ரேலின் வடக்கு எல்லைகளில் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தாக்குதல்கள் நிகழ்த்தாமலிருப்பதை உறுதிசெய்ய, இஸ்ரேல் எல்லைகளில்(லெபனானை ஒட்டியுள்ள பகுதிகளில்) பயங்கரவாதக் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்த வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இஸ்ரேல் - லெபனான் எல்லைகளின் இருபுறத்திலும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்புவதை உறுதிசெய்ய தூதரக ரீதியிலான தீர்வு எட்டப்பட வேண்டும்.

(மத்திய கிழக்குப் பகுதிகளில்)அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கு, ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்களிலிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதில் அமெரிக்க வலுவாக உள்ளது. அதேபோல, போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை தடுத்திடுவதிலும் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக ராணுவ தாக்குதல்களை நிகழ்த்தினால் ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.

மறுபுறம், லெபனானுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம். லெபனானின் இறையாண்மை, அந்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு ஆதரவாக ஐக்கிய அரபு அமீரகம் இருப்பதாக இன்று(அக். 1) தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT