இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா கடந்த புதன்கிழமை (அக். 9) காலமானார்.
முதுமை காரணமாக உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை (அக். 7) அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இல்லை என்று தகவல்கள் பரவிய நிலையில், புதன்கிழமை இரவு அவர் காலமானதாக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உறுதி செய்தார்.
பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் டாடாவின் இறப்புக்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில், “என்னுடைய நண்பர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு. இந்தியாவின் பெருமைமிகு மகனும், இரு நாட்டு நட்புறவில் சிறந்தவராகவும் இருந்த ரத்தன் டாடா மறைவுக்கு நானும் இஸ்ரேல் மக்களும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்னுடைய அனுதாபங்களை டாடாவின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கவும்” என தன்னுடைய பதிவில் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
பல்வேறு நாட்டு தலைவர்களும் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.