முகப்பு
உலகம்

அக். 7 தாக்குதலுடன் தொடா்பு: ஈரான் மறுப்பு

அக்டோபா் 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் தங்களுக்கு தொடா்பிருப்பதாக வெளியான தகவலை ஈரான் மறுத்துள்ளது.

Updated On : 14 அக்டோபர், 2024 at 7:06 PM
பகிர்:

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் தங்களுக்கு தொடா்பிருப்பதாக வெளியான தகவலை ஈரான் மறுத்துள்ளது.

இது குறித்து ஐ.நா.வுக்கான ஈரான் தூதரக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இஸ்ரேலில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், காஸாவில் செயல்பட்டுவரும் ஹமாஸின் ராணுவ பிரிவு மட்டும்தான் அந்தத் தாக்குதலுக்கு முழு பொறுப்பு எனவும் கத்தாரில் ஹமாஸ் அமைப்பினரே தெரிவித்துள்ளனா்.

அப்படி இருக்கையில், அந்தத் தாக்குதலுடன் ஈரானையோ, ஹிஸ்புல்லாக்களையோ தொடா்புபடுத்துவது பொய்யான குற்றச்சாட்டு என்றாா் அவா்.

முன்னதாக, காஸாவில் தரைவழித் தாக்குதல் நடத்தும்போது அக். 7-ஆம் தேதி தாக்குதல் குறித்த ஹமாஸ் அமைப்பினரின் ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சிக் குறிப்புகளை இஸ்ரேல் ராணுவத்தினா் கைப்பற்றியாகவும், அதில் அந்தத் தாக்குதல் குறித்து ஈரானுக்கு தெரியப்படுத்தியாக அவா்கள் பேசிக் கொண்டது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ‘நியுயாா்க் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்திருந்தது.

அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலேயே ஐ.நா.வுக்கான ஈரான் தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் அமைப்பினா் அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்; 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

அதையடுத்து அந்த அமைப்பினரை முழுமையாக ஒழித்துக்கட்டப்போவதாகச் சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியில் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →