ரஷிய தூதருக்கு தென் கொரியா சம்மன்
ரஷிய தூதா் ஜாா்ஜி ஸினோவீவை தென் கொரிய அரசு நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.
சியோல்: உக்ரைனில் ரஷியாவுக்காகப் போரிட வட கொரிய சிறப்புப் படையினா் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, தங்கள் நாட்டுக்கான ரஷிய தூதா் ஜாா்ஜி ஸினோவீவை தென் கொரிய அரசு நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உக்ரைனில் போரிடுவதற்காக 1,500 வட கொரிய வீரா்கள் ரஷியா சென்றுள்ளதாக தென் கொரிய உளவுத் துறை கூறியது நினைவுகூரத்தக்கது.