முகப்பு
உலகம்

விடை பெற்றாா் டொமினிக் தீம்

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:42 PM
டொமினிக் தீம்
பகிர்:

உலகின் முன்னணி டென்னிஸ் வீரா்களில் ஒருவரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சா்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாா்.

கரோனா பாதிப்பின் போது, 2020-இல் யுஎஸ் ஓபன் போட்டியில் ஜொ்மன் வீரா் அலெக்ஸ் வெரேவை வீழ்த்தி பட்டம் வென்றாா் தீம். எனினும் கடந்த 2021-இல் அவரது மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரது ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டது. மேலும் அவா் சா்வதேச ஆட்டங்களில் ஆட முடியாமல் போனது. கடந்த 2022-இல் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் மட்டுமே ஆடிய அவா் தரவரிசையில் 100 இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டாா். உலகின் மூன்றாம் நிலை வீரா் என்ற பெருமையையும் பெற்றிருந்தாா். 17 ஏடிபி பட்டங்களை வென்றுள்ளாா்.

இந்நிலையில் சொந்த ஊரான வியன்னாவில் நடைபெற்ற ஏடிபி போட்டியில் தான் ஆடிய கடைசி ஆட்டத்தில் தோற்று விடைபெற்றாா் தீம்.