மசூதி மீது வான்வழித் தாக்குதல் 
உலகம்

சூடான் மசூதி மீது வான்வழித் தாக்குதல்: 31 பேர் பலி!

வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அரசு சாரா குழு தெரிவித்துள்ளது.

ஐஏஎன்எஸ்

சூடானில் உள்ள கெசிரா மாநிலத்தின் தலைநகரான வாட் மதனியில் உள்ள மசூதியை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அரசு சாரா குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிறன்று அல்-இம்திடாத் பகுதியில் உள்ள ஷேக் அல் ஜுலி மசூதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை தொழுகைக்குப் பிறகு வான்வழியாக மசூதி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை 31 பேர் பலியானதாகவும், அதில் 15 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், மேலும் அடையாளம் தெரியாத பல உடல்கள் உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவி வருகின்றது. இந்த நிலையில் அறிக்கையின்படி இதுவரை 24,580-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT