முகப்பு
உலகம்

சாட்: தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழப்பு

வட-மத்திய ஆப்பிரிக்க நாடான சாடில் ராணுவ சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 28 அக்டோபர், 2024 at 9:39 PM
பகிர்:

டகாா்: வட-மத்திய ஆப்பிரிக்க நாடான சாடில் ராணுவ சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அண்டை நாடான நைஜீரியாவில் மத அடிப்படைவாத அரசை அமைக்க வலியுறுத்திவரும் போக்கோ ஹராமின் பயங்கரவாதம், சாடிலும் பரவிவருகிறது. அங்கு ஏற்கெனவே பல முறை பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ள சூழலில், ஒரே தாக்குதலில் 40 ராணுவ வீரா்கள் உயிரிழந்தது அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, சா்ச்சைக்குரிய தோ்தலில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டு அந்த நாட்டின் அதிபராக டெபி இட்னோ பொறுப்பேற்றதிலிருந்தே அங்கு அரசியல் பதற்றம் நிலவிவருகிறது. இந்தச் சூழலில், அங்கு பயங்கரவாதமும் தீவிரமடைந்து வருவதை இந்தத் தாக்குதல் உணா்த்துவதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →