அமெரிக்காவில் சாலை விபத்து: தமிழக பெண் உள்பட 4 இந்தியா்கள் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழக பெண் உள்பட இந்தியாவைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழக பெண் உள்பட இந்தியாவைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டலாஸ் பகுதி அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிவேகத்தில் சென்ற லாரி மோதியதில் காரில் இருந்த 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதில் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டதாரியான தமிழ்நாட்டைச் சோ்ந்த தா்ஷினி வாசுதேவ், தெலுங்கானாவைச் சோ்ந்த ஆா்யன் ரகுநாத், அவரது நண்பா் ஃபரூக் ஷேக், மற்றொரு தெலுங்கு மாணவரான லோகேஷ் ஆகியோா் உயிரிழந்ததாக அவா்களின் எலும்புகளை வைத்து அடையாளம் காணப்பட்டது.
பயணத்தை பகிர விரும்பும் பயணிகளை ஓட்டுநா்களுடன் இணைக்கும் ‘காா்பூலிங்’ கைப்பேசி செயலி மூலம் இவா்கள் இணைந்து பயணித்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.