விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் காத்திருக்கும் பயணிகள் AP
உலகம்

அதானியுடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு! கென்யாவில் விமான சேவை பாதிப்பு!

அதானி நிறுவனத்தின் ஒப்பந்தத்துக்கு எதிராக கென்யாவில் நடைபெறும் போராட்டம் பற்றி...

DIN

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கென்யாவில் விமான ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவதால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், கென்யா சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை நூற்றுக்கணக்கான பயணிகள் விமான கிடைக்காமல் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கென்யா விமான நிலையத்திலேயே படுத்து உறங்கும் பயணி.

கென்யா அரசு - அதானி ஒப்பந்தம்

இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களின் பராமரிப்பு ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ள அதானி நிறுவனம், கென்யா அரசுடனும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை புதுப்பித்து, கூடுதல் ஓடுபாதை மற்றும் புதிய முனையம் அமைத்து அதனை 30 ஆண்டுகள் பராமரிக்க அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கென்யா அரசு அறிவித்திருந்தது.

இந்த ஒப்பந்தம் விமான நிலையத்தில் தற்போது பணிபுரிந்து வருபவர்களின் வேலை இழப்புக்கு வழிவகுக்கும் என்று கண்டனம் தெரிவித்துள்ள விமான நிலைய தொழிற்சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது.

அதன்படி, விமான நிலைய ஊழியர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கென்யா ஏர்வேஸ் நிறுவனத்தின் பல விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படும் என்றும், ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இடைக்கால தடை

அதானி நிறுவனத்துடனான கென்யா அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, கென்யா மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் அந்த நாட்டு நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர்.

அந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிமன்றம், விசாரணை முடியும் வரை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT