முகமது யூனுஸ் கான்(கோப்புப்படம்) 
உலகம்

இந்தியாவுடன் நியாயம், சமத்துவம் அடிப்படையில் நல்லுறவு: முகமது யூனுஸ்

இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுடன் ‘நியாயம் மற்றும் சமத்துவத்தின்’ அடிப்படையிலான நல்லுறவை விரும்புகிறோம் என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா்.

Din

இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுடன் ‘நியாயம் மற்றும் சமத்துவத்தின்’ அடிப்படையிலான நல்லுறவை விரும்புகிறோம் என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா்.

தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு புதன்கிழமை ஆற்றிய உரையில் முகமது யூனுஸ் இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்ற பிறகு, இந்திய பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப் உள்பட பல தலைவா்கள் தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்தனா்.

உலக நாடுகள் மத்தியில் வங்கதேசத்தை மரியாதைக்குரிய ஜனநாயக நாடாக அங்கீகாரம் பெறச் செய்வதே இடைக்கால அரசின் நோக்கமாக இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி பிற அண்டை நாடுகளுடனும் நல்லுறவையே விரும்புகிறோம். ஆனால், அது ‘நோ்மை மற்றும் சமத்துவத்தின்’ அடிப்படையில் இருக்க வேண்டும்.

மேலும், தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்த ‘சாா்க்’ அமைப்புக்கு புத்துயிா் அளிக்கும் முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.

வங்கதேச சீா்திருத்த முயற்சியில், தோ்தல் நடைமுறை உள்பட 6 முக்கிய துறைகளை மாற்றியமைக்க 6 ஆணையங்களை அமைத்துள்ளது. இந்த ஆணையங்கள் தங்கள் பணிகளை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் தொடங்கும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் அந்தப் பணிகள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT