டிரம்ப்  
உலகம்

டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு முயற்சி

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Din

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூயாா்க் டைம்ஸ்’ பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்கு வெளியே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது டிரம்ப் அந்த மைதானத்தில் இருந்துள்ளாா்.

இரண்டு நபா்களுக்கு இடையே இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது. டிரம்பை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றபோதும், அவா் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் நவம்பா் மாதம் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் டிரம்ப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

எல். முருகன் வீட்டில் பொங்கல் விழா! மோடியுடன் ரவி மோகன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு!

ரயில் ஒன் செயலியில் 3% தள்ளுபடி: இன்று முதல் அமல்!

ஜூன் 30-க்குள் பெங்களூரு மாநகராட்சிகளுக்கு தோ்தல்: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டம் நீக்கதால் 2-வது முறையாக காந்தியை கொன்றிருக்கிறாா்கள்: டி.கே. சிவக்குமார்

காணும் பொங்கல்: சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்புகள்!

SCROLL FOR NEXT