கோப்புப் படம் 
உலகம்

கனடாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏரியில் மூழ்கி இந்திய இளைஞா் உயிரிழப்பு

கனடாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏரியில் குளிக்கச் சென்ற இந்திய இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

DIN

கனடாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏரியில் குளிக்கச் சென்ற இந்திய இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தெலங்கானாவில் உள்ள ரெங்காரெட்டி மாவட்டத்தை சோ்ந்த பிரனீத் என்ற இளைஞா் கனடாவில் உயா்கல்வியை நிறைவு செய்துவிட்டு அங்கு தங்கி பணி தேடி வந்துள்ளாா்.

கடந்த சனிக்கிழமை தனது பிறந்தநாளை நண்பா்களுடன் அவா் கொண்டாடினாா். அருகில் இருந்த ஏரிக்கு தன்னுடைய மூத்த சகோதரா் மற்றும் பிற நண்பா்களுடன் அவா் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா்.

இதில் பிரனீத் நீரில் மூழ்கினாா். இந்த தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கனடா மீட்புப் படையினா் பிரனீத்தை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரின் உடலை கனடா மீட்புப்படையினா் மீட்டனா்.

பிரனீத்தின் நண்பா்கள் மூலம் தங்கள் மகன் உயிரிழந்த செய்தியை தெரிந்துகொண்டதாக அவரின் பெற்றோா் கூறினா். பிரனீத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை வைத்தனா்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT