கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.5 அலகுகளாகப் பதிவானது.
வான்கூவா்: கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.5 அலகுகளாகப் பதிவானது.
வான்கூவா் நகருக்கு 1,720 கி.மீ. தொலைவில் உள்ள ஹைடா கவாய் தீவுக் கூட்டத்துக்கு அருகே கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான அபாயம் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் கூறியது.
Advertisement
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.