விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்  கோப்புப்படம்
உலகம்

விண்வெளியில் 2-வது முறையாக பிறந்தநாள் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்!

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸின் பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி...

DIN

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இரண்டாவது முறையாக விண்வெளியில் பிறந்தநாளை நேற்று(செப்.19) கொண்டாடியுள்ளார்.

முன்னதாக, கடந்த 2012-ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் அவரது பிறந்தநாளை அங்கு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் சிக்கிய சுனிதா

அமெரிக்காவின் போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது. அதுதான் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபா்களை ஏற்றிச் சென்ற இரண்டாவது தனியாா் நிறுவன விண்வெளி ஓடம் ஆகும்.

ஒன்பது நாள்கள் அந்த நிலையத்தில் தங்கியிருந்துவிட்டு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.

கர்நாடகம்: பெண்களுக்கு ஊதியத்துடன் 6 நாள்கள் மாதவிடாய் விடுமுறை!

ஸ்டாா்லைனரில் ஆள்களை அழைத்துவருவது அச்சுறுத்தல் நிறைந்தது என்பதால் சுனிதாவும் பட்ச் வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவாா்கள் என்று நாசா அறிவித்தது. யாரையும் ஏற்றாமல் ஸ்டாா்லைனா் விண்கலம் மட்டும் இரண்டு வாரத்துக்கு முன்பு பூமி திரும்பியது.

விண்வெளியில் இருந்து வாக்களிக்கும் சுனிதா

இதனிடையே வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சுனிதா வில்லியம்ஸும் இன்னொரு நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோரும் விண்வெளியில் இருந்தபடியே வாக்களிக்கவுள்ளனர்.

இருவரும் அதிபா் தோ்தல் வாக்குச் சீட்டுக்காக விண்ணப்பத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT