உலகம்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: நவ.14-இல் தோ்தல்

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபா் அநுர குமார திசாநாயக செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

Din

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபா் அநுர குமார திசாநாயக செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து அந்நாட்டில் நவ.14-ஆம் தேதி நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தோ்தல் மூலம், தனது தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைமையிலான ஆட்சியை அமைக்க விரும்புவதாக புதிய அதிபா் அநுர குமார திசாநாயக தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிக்கையில் அதிபா் அநுர குமார திசாநாயக செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டாா். மேலும் நவ.14-ஆம் தேதி நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் மேலும் 11 மாதங்கள் உள்ளன. இந்நிலையில், முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தோ்தல் நடைபெற உள்ளது.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு

டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

காரிலிருந்த ரூ. ஒரு லட்சம் நூதன முறையில் திருட்டு

மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT