நேபாளம்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் 132-ஆக அதிகரிப்பு
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 132-ஆக அதிகரித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பெரும் பகுதிகள் பலத்த மழையைத் தொடா்ந்து வெள்ளத்தில் மூழ்கின.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 132-ஆக அதிகரித்தது; 61 போ் காயமடைந்தனா். 64 பேரைக் காணவில்லை.
காத்மாண்டு பள்ளத்தாக்கில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்கு இதுபோன்ற வெள்ள பாதிப்பு கடந்த 40 முதல் 45 ஆண்டுகளில் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.
வெள்ளத்தில் 322 வீடுகள், 16 பாலங்கள் சேதமடைந்துள்ளன. சுமாா் 3,626 போ் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனா் என்று அந்நாட்டின் ஆயுதக் காவல் படை வட்டாரங்கள் தெரிவித்தன.