முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 7 பேர் பலி!

கட்டுமானத் தொழிலாளர்களின் குடிசைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு

Updated On : 29 செப்டம்பர், 2024 at 7:58 AM
கோப்புப் படம்
பகிர்:

பாகிஸ்தானில் கட்டுமானத் தொழிலாளர்களின் குடிசைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த 8 தொழிலாளர்கள், ஞாயிற்றுக்கிழமையில் ஒரு குடிசையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், அவர்களின் குடிசைக்குள் புகுந்த பயங்கரவாதிகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் குடியரசுத் தலைவர் ஆசிப் சர்தாரி இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதல் குறித்த அறிக்கையை முதல்வர் மிர் சர்ப்ராஸ் புக்தி சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் கோரியுள்ளார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தவாறு உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் லாரி மற்றும் பேருந்தில் பயணித்த 23 பேரை கீழிறக்கிய பயங்கரவாதிகள், அவர்களின் அடையாளங்களை சோதனையிட்ட பின்னர், 23 பேரையும் சுட்டுக் கொன்றனர்.

அங்கிருக்கும் கனிம வளங்களை சிலர் சுரண்டுவதால்தான், தாக்குதல் நடத்துவதாக பயங்கரவாதிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.