கோப்புப்படம். 
உலகம்

காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 4 பேர் பலி

வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பேர் பலியானார்கள்.

DIN

வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பேர் பலியானார்கள்.

வடக்கு காஸாவில் பெய்ட் லஹியா நகருக்கு மேற்கே அமைந்துள்ள பள்ளியின் மீது இஸ்ரேலிய விமானம் ஞாயிற்றுக்கிழமை குண்டுவீசித் தாக்குதல் நடத்திது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள்.

மேலும் பலர் காயமடைந்ததாக பாலஸ்தீனிய பாதுகாப்பு வட்டாரங்கள் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.

இதற்கிடையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்குள் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக விமானப்படை துல்லியமான தாக்குதலை நடத்தியது என்று தெரிவித்துள்ளது.

வடக்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதலுக்குள்ளான பள்ளி, இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்குமிடமாக மாற்றப்பட்டிருந்ததாக பாலஸ்தீனிய பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காஸாவை தளமாகக் கொண்ட சுகாதார அதிகாரிகளின் அறிக்கையின்படி, அக்டோபர் 7, 2023 அன்று காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் வெடித்ததில் இருந்து இதுவரை 41,595 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 96,200 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT