அண்மைக்காலமாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் சூடுபிடித்திருக்கும் நிலையில் எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புங்கள் என்று டெஸ்லா போராட்டக்காரர்களின் போஸ்டர் வைரலாகியிருக்கிறது.
எலான் மஸ்க் தொடர்பான செய்திகளை தொடர்ந்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வரும் டோஜ்டிரைசனர் என்பவர், பொதுவாக எலான் மஸ்க் வெளியிடும் அறிவிப்புகளை உடனடியாக பகிர்ந்துவிடுவார்.
தற்போது, எலான் மஸ்க்குக்கு எதிராக வெளியான போஸ்டர் ஒன்றரையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில், எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிவிடுங்கள் எனறு வெளியான போஸ்டர்தான் அது.
அதனைப் பகிர்ந்திருப்பதோடு, மஸ்க்கை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். உண்மையில், செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை தயாரித்து வரும் நபரே அவர்தான் எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். நான் முயற்சி செய்கிறேன், நான் முயற்சி செய்கிறேன் என்று சிரிக்கும் ஸ்மைலியையும் இணைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.