போப் பிரான்சிஸ்  
உலகம்

போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் காலமானார்

பிடிஐ

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 88.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் அமெரிக்காவிலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாக தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது

2013ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது திருத்தந்தையாக போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆர்ஜென்டினாவில் பிறந்த போப் பிரான்சிஸ், 12 ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாகவாக பொறுப்பு வகித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நிமோனியா பாதித்து மருத்துவமனையில் 38 நாள்கள் சிகிச்சைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் மருத்துவமனையிலிருந்து வீடு, திரும்பி, மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வு எடுத்து வந்தார்.

போர்களை முடிவுக்குக் கொண்டு வருவது, உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தன்னுடைய 22 வயதில் கிறிஸ்தவ சமுதாயத்துக்காக சேவையாற்றத் தொடங்கிய போப் பிரான்சிஸ், உடல்நிலை பாதிப்பு காரணமாக சிறு வயதிலேயே ஒரு நுரையீரலை இழந்தவர்.

கடந்த மார்ச் 13, 2013 - அன்று மழை பெய்த ஓர் இரவுக்குப் பிறகு, ஆர்ஜென்டினாவில் பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற பெயர்கொண்ட போப் பிரான்சிஸ், 2,000 ஆண்டுகள் பழமையான கத்தோலிக்க திருச்சபைக்கு, புத்துணர்ச்சியைக் கொண்டு வந்தவர்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாக இருந்த 16வது போப் பெனடிக்ட் எதிர்பாராதவிதமாக தனது பொறுப்பை ராஜிநாமா செய்த நிலையில், அப்பொறுப்புக்கு போப் பிரான்சிஸ் தேர்வ செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

SCROLL FOR NEXT