கனடாவில் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் திங்கள்கிழமை(ஏப். 28) நடைபெற்றது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(ஏப். 29) காலை வாக்குப்பதிவு அனைத்து பகுதிகளிலும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
கனடாவில் பிரதமா் மாா்க் காா்னேயின் லிபரல் கட்சிக்கும், பியா் பாய்லியெவ்ரே தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சிக்கும் கடுமையான போட்டி நிலவிய இந்தத் தோ்தலில், லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று கனடா ஒளிபரப்பு கழகமான ‘சிபிசி’ அறிவித்துள்ளது. எனினும், தனி பெரும்பான்மையுடன் அக்கட்சி அரசு அமைக்குமா என்பது இன்றிரவு வெளியாகும் தேர்தல் முடிவுக்குப் பின்னரே தெரிய வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.