எலான் மஸ்க்  
உலகம்

இந்த நாடு, 2025க்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும்! எலான் மஸ்க் எச்சரிக்கை

ஜப்பான், 2025 இறுதிக்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜப்பான் நாட்டில் மக்கள் தொகை அண்மை ஆண்டுகளில் வெகுவாக சரிந்து வரும் நிலையில், 2025 இறுதிக்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், இந்த ஆண்டு இறுதிக்குள், ஜப்பான் 10 லட்சம் மக்களை இழந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தொகை பிரச்னையை சமாளிக்க செய்யறிவுதான் ஒரே வழியாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

ஜப்பானில், பிறப்பு விகிதத்துக்கும் இறப்பு விகிதத்துக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பிட்டு அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்நாட்டில் பல ஆண்டு காலமாகவே இந்த விகிதத்தில் மிக மோசமான வேறுபாடு காணப்படுகிறது.

ஜப்பானின் குறைந்துவரும் மக்கள் தொகையானது கவலைதரும் சவாலான விஷயமாகவே உள்ளது. மருத்துவ செலவினங்கள், சமூக சேவை தொடர்பான அழுத்தங்களால், மக்கள் தொகை குறைவதால், தொழிலாளர் வளம் குறையும், புவியியல் அமைப்பில் மாற்றம் ஏற்படும். எனவே, இங்கு பிரச்னைகளை கையாள செய்யறிவுதான் மிக முக்கியப் பங்கு வகிக்கும். மக்கள் தொகை வீழ்ச்சியால் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூகத்தின் மீதான தாக்கங்களை செய்யறிவு தடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் ஏற்பட்டிருப்பது ஏதோ திடீரென உருவான பிரச்னை அல்ல. அங்கு அரை நூற்றாண்டு காலமாகவே மக்கள் தொகை சரிந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த சில வருடங்களில், ஜப்பான் மக்கள் தொகை எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்தது என்பதை அரசும், ஊடகங்களும் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது, ஜப்பானில் மிகக் குறைந்த அளவில் குழந்தைகள் பிறப்பும், வயது முதுமை காரணமாக அதிக இறப்புகளும் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே பதிவாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை!

கயல், எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய தொடர்கள்! இந்த வார டிஆர்பி பட்டியல்!

ராகுல் காந்தி கைது: தவெக தலைவர் விஜய் கண்டனம்!

அல்-ஜசீரா செய்தியாளர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 6 பேர் பலி!

தனுஷுடன் காதலா? மிருணாள் தாக்கூர் பதில்!

SCROLL FOR NEXT