பயனர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாக எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுக்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உலகளவில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்துக்கு வாட்ஸ் ஆப் செயலியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப்-க்கு மாற்றாக பல செயலிகள் இருந்தாலும், வாட்ஸ் ஆப் தான் முன்னணி செயலியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், வாட்ஸ் ஆப் பயனர்களின் உரையாடல்களை அந்நிறுவன ஊழியர்களால் படிக்க முடியும் என்று நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்ததாரர்கள் சமீபத்தில் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியது.
இதனிடையே, வாட்ஸ் ஆப் மீதான குற்றச்சாட்டை மேற்கோள் காட்டிய எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க், "வாட்ஸ் ஆப் அரட்டைகள் உண்மையிலேயே தனிப்பட்டவையா? என்று அமெரிக்க அதிகாரிகள் இப்போது விசாரித்து வருகின்றனர். மேலும், வாட்ஸ் ஆப்-க்கு பதிலாக எக்ஸ் சாட்-ஐ பயனர்கள் பயன்படுத்தலாம்" என்று கூறியுள்ளார். அதாவது, அவரது எக்ஸ் சாட் விளம்பரத்துக்காக வாட்ஸ் ஆப் மீதான குற்றச்சாட்டை எலான் மஸ்க் மேற்கோள் காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எலானின் குற்றச்சாட்டை மறுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம், "எக்ஸ் சாட் எதிர்காலத்தில் பாதுகாப்பான உடனடி தகவல் பரிமாற்றத்துக்கான பயன்பாடாக மாறும் என்று தோன்றுகிறது. இருப்பினும், தங்கள் தயாரிப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, எலானும் அவரது குழுவினரும் வாட்ஸ் ஆப் மீது தாக்குதல் நடத்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இவர்களின் பொய்க் குற்றச்சாட்டுகளால், சாட்ஜிபிடி, விக்கிபீடியா, கூகுள் தேடல், ஆப்பிள் ஆகியவற்றையும் பாதிக்கிறது. அவர்கள் பயனர்களை எக்ஸ் சாட் மற்றும் க்ரோக்கிற்கு மாற்ற முயற்சிக்கிறார்கள்.
பயனர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் எந்தப் பயன்பாட்டையும் பயன்படுத்த சுதந்திரம் இருப்பதாக நம்புகிறேன். வாட்ஸ் ஆப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வதால், வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துங்கள் என்று நான் சொல்ல முற்படவில்லை. நீங்கள் விரும்பும் எதனை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
ஆனால், இந்த மாதிரியான பொய்க் குற்றச்சாட்டுகளை உங்களை பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.