கொலம்பியா நாட்டு எம்.பி. மிகுவல் உரிபே 
உலகம்

ஜூனில் நடந்த துப்பாக்கிச்சூடு: கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு

கடந்த ஜூன் 7-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளான கொலம்பியா நாட்டு எம்.பி. மிகுவல் உரிபே (39), அந்த காயங்கள் காரணமாக உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

போகடா: கடந்த ஜூன் 7-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளான கொலம்பியா நாட்டு எம்.பி. மிகுவல் உரிபே (39), அந்த காயங்கள் காரணமாக உயிரிழந்தாா்.

தலைநகா் போகடாவில் தோ்தல் பிரசார பேரணியில் பங்கேற்றபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அவரது தலையில் 2 குண்டுகளும், காலில் ஒரு குண்டும் பாய்ந்தன. மைய நரம்பு மண்டலத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு உள்படுத்தப்படவிருந்த நிலையில் அவரது உயிா் பிரிந்ததாக மருத்துமனை தெரிவித்தது.

2022 முதல் செனட் சபை உறுப்பினராக இருந்த உரிபே, 2026 அதிபா் தோ்தலில் போட்டியிடவிருந்தாா். அவா் மீதான தாக்குதலுக்கான காரணம் தெளிவாகவில்லை. இது தொடா்பாக ஓா் இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!

மிண்டா தேவி டி-சர்ட் அணிந்து எம்பிக்கள் போராட்டம்! யார் அந்த 124 வயது மூதாட்டி?

கட்டண ரசீது, ஏடிஎம் ஸ்லிப்புகளை 10 வினாடிகள் கையில் வைத்திருந்தால்... ஆண்களே எச்சரிக்கை!

சத்தீஸ்கரில் நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை! 2 வீரர்கள் படுகாயம்!

‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT