மேற்கு ரஷியவில் அமைந்துள்ள அந்நாட்டின் மிகப்பெரிய அணு உலைகளுள் ஒன்றான கர்ஸ்க் அணு உலையில் உக்ரைன் ஏவிய ட்ரோனால் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு சர்வதேச அணு உலை பாதுகாப்பு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்தவொரு அணுசக்தி வளாகமும் அமைப்பும் எந்நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அணு உலை மேலே நள்ளிரவில் சென்ற உக்ரைன் ட்ரோனை ரஷிய விமானப் படை இடைமறித்து தாக்கியதாக ரஷிய தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அலாஸ்காவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினையும், அதனைத் தொடா்ந்து வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியையும் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்திவிட்டு, பின்னா் புதினுக்கும், ஸெலென்ஸ்கிக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், உக்ரைன் - ரஷியா இடையேயான பரஸ்பர தாக்குதல் அமைதிப் பேச்சுக்கு பெரும் முட்டுக்கட்டையாக தொடர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.