உலகம்

ஹாங்காங் தீவிபத்து: உயிரிழப்பு 159-ஆக உயா்வு

ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 156-ஆக உயா்ந்துள்ளது.

Chennai

ஹாங்காங்: ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 156-ஆக உயா்ந்துள்ளது.

தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு, 5 உடல்களை மீட்டதைத் தொடா்ந்து இந்த எண்ணிக்கை உயா்ந்தது. இன்னும் 31 போ் காணாமல் போயுள்ள நிலையில், சில உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

எட்டு குடியிருப்பு கோபுரங்களைக் கொண்ட அந்தக் குடியிருப்பு தளத்தில் கடந்த வாரம் (நவ. 26) ஏற்பட்ட அந்த தீவிபத்தில் 7 கோபுரங்கள் முழுமையாக சேதமடைந்தன. அந்தக் கட்டடங்களில் புதுபித்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பழைய பாணியில் மூங்கில் சாரங்களையும், தரமற்ற, எளிதில் தீப்பற்றக்கூடிய மறைப்பு வலைகளையும் பயன்படுத்தியதே நெருப்பு மிக வேகமாகப் பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்ட நிறுவனங்களின் இயக்குநா்கள் மற்றும் கள மேலாளா்கள் என்று போலீஸாா் கூறினா்.

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை!

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 30% உயா்வு!

மொஹல்லா மருத்துவமனையில் தீ விபத்து

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது: பிரதமா் மோடி

ரயில் நிலையங்களில் பெண்களை குறிவைத்து கொள்ளை: 5 பெண்கள் கைது

SCROLL FOR NEXT