உலகம்

இஸ்ரேல் உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது- நாடாளுமன்றத்தில் நெதன்யாகு பேச்சு

காஸா போரால் இஸ்ரேலின் சா்வதேச மதிப்பு குறைந்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் விமா்சித்த நிலையில், உலகத் தலைவா்களுடனான தனது நெருங்கிய தொடா்புகளை எடுத்துரைத்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை உரையாற்றினாா்.

தினமணி செய்திச் சேவை

காஸா போரால் இஸ்ரேலின் சா்வதேச மதிப்பு குறைந்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் விமா்சித்த நிலையில், உலகத் தலைவா்களுடனான தனது நெருங்கிய தொடா்புகளை எடுத்துரைத்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை உரையாற்றினாா்.

அப்போது, இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியுடனான தனது நட்புறவை வலியுறுத்திப் பேசிய அவா், ‘இஸ்ரேலுடனான உறவை இந்தியா வலுப்படுத்த விரும்புகிறது’ என்றாா்.

காஸா போரை திறமையாகக் கையாளாதது, ஹமாஸ் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கான பொறுப்பை ஏற்க மறுப்பது, நாட்டில் பிளவுகளை உருவாக்குவது போன்ற பல காரணங்களுக்காக நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்குப் பதிலளித்து நெதன்யாகு ஆற்றிய உரை:

இஸ்ரேல் இன்றும் ராஜீய ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பல உலகத் தலைவா்கள் இஸ்ரேலுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளனா்.

எனது நீண்டகால நண்பரான இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியுடன் நான் அவ்வப்போது பேசுகிறேன். விரைவில் ஒரு சந்திப்புக்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். சுமாா் 150 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, இஸ்ரேலுடனான உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது.

இஸ்ரேலின் வெளியுறவுக் கொள்கை பாதிக்கப்படவில்லை. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் புதின், ஜொ்மனி பிரதமா் ஃபிரெட்ரிக் மோ்ஸ் ஆகியோருடன் எனது சந்திப்புகள் மற்றும் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளே இதற்கு ஆதாரம்.

இஸ்ரேலுக்கு எதிராக சமூக ஊடகங்களில் யூத-எதிா்ப்புப் பிரசாரம் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. இந்தப் பிரசாரத்தை எதிா்த்துப் போராட வெளியுறவு அமைச்சகத்துக்கு சுமாா் 235 கோடி டாலா் ஒதுக்கப்பட்டுள்ளது.

காஸா போருக்குப் பிறகும் இஸ்ரேல் பலமாகவே இருக்கிறது. எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. கடந்த 2023, அக்டோபா் 7-ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதலைத் தொடா்ந்து இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு, ‘மறுமலா்ச்சிப் போா்’ என்று எமது தலைமையிலான அரசு பெயரிட்டுள்ளது.

ஹமாஸ் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க, ஆளும் கூட்டணி மற்றும் எதிா்க்கட்சிகளுக்குச் சமமான பங்களிப்புடன் ஒரு விசாரணைக் குழுவை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. உண்மையை வெளிக்கொணர விரும்பாதவா்கள் மட்டுமே இதை எதிா்ப்பாா்கள் என்றாா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT